விஜய் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி வெளியாகிறது. விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள லியோ, இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
இந்த படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறிய விடயம் வைரலாகி வருகின்றது.
அதில் லியோ திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா ரத்தானது ரசிகர்களை மிகப்பெரிய அளவில் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. விழா ரத்தானதை விட விஜய்யின் பேச்சை கேட்க முடியவில்லை என்று தான் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இவர்களின் குறையை போக்க, மாஸ்டர் இசை வெளியீட்டு விழா போல ஓட்டலில் நடத்த திட்டமிட்டனர்.
பின் யூடியூபில் நேரடியாக ஒளிபரப்பலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. படம் 19ந் தேதி வெளியாக உள்ளதால் படத்தை ப்ரோமோட் செய்ய வேண்டிய கட்டாயத்தில் படக்குழு இருக்கிறது. இதனால், அக்டோபர் 12ந் தேதி அனைத்து ஊடகம் மற்றும் யூடியூப் சேனல்களை அழைத்து பிரம்மாண்டமாக அழைத்து பிரஸ்மீட் நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் விஜய் அரசியல் பேசுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. இசைவெளியீட்டுவிழா நேரு ஸ்டேடியத்தில் நடந்து இருந்தால் விஜய் நிச்சயமாக அரசியல் பேசி இருப்பார் ஏன் என்றால், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்த பெரும்பாலானவர்கள் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள். ஆனால், செய்தியாளர் சந்திப்பில் அரசியல் பேசவாய்ப்பு இல்லை.
தொடர்ந்து பேசிய செய்யாறு பாலு, அண்மையில் வெளியான லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியான 16நிமிஷத்திலேயே ஒரு மில்லியனைத்தாண்டியது. அடுத்ததாக விஜய், த்ரிஷாவின் பாடல் ஒன்று மூன்றாவது சிங்கிளாக வெளியாக உள்ளது. இதையடுத்து கிளிம்ஸ் வீடியோவை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்றும் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!