கேப்டன் விஜயகாந்த் என அழைக்கப்படும் விஜயகாந்த் இந்திய அரசியல்வாதி மற்றும் பிரபல திரைப்பட நடிகர் ஆவார். தனது கம்பீரமான நடிப்பினால் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த "வானத்தைப் போல, ஊமை விழிகள், கஜேந்திரா, சத்ரியன், ரமணா" போன்ற பல திரைப்படங்கள் இன்றும் நம் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளன.
அரசியலில் களமிறங்கிய நடிகர் விஜயகாந்த் கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் இருந்து விலக ஆரம்பித்திருந்தார். ஒரு கட்டத்தில் இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டவுடன் முழுமையாக சினிமாவில் இருந்து விலகி விட்டார். இந்நிலையில் சினிமாவில் மட்டுமல்லாது தற்போது அரசியலில் இருந்தும் விலகிவிட்ட இவரது கட்சி நடவடிக்கைகளை அவரது குடும்பத்தினரே கவனித்துக் கொள்கின்றனர்.
உடல்நலக் குறைவு காரணமாக அவ்வப்போது மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நடிகர் விஜயகாந்த், அண்மையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவரது காலில் இருந்து 3 விரல்கள் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
அதாவது காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததன் காரணமாக அறுவை சிகிச்சை செய்து 3 விரல்கள் அகற்றப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் சிகிச்சையின் பின் தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்செய்தியை அறிந்த நடிகர் விஜயகாந்தின் ரசிகர்கள் அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று பிரார்த்தித்து வருகின்றனர்.
பிற செய்திகள்
- உதட்டில் முத்தம் கொடுக்க போகும் காஜல்-அவரே வெளியிட்ட புகைப்படம்..!
- மீண்டும் பாடலாசிரியராக அவதாரம் எடுக்கும் நம்ம சிவகார்த்திகேயன்- எந்த படத்திற்கு தெரியுமா..?
- “அது என் 18 வருஷ கனவு…” மனம் திறந்து பல விசயங்களை பேசிய நடிகர் ஜெய்..!
- ராதிகா வீட்டிற்கு சென்ற பாக்யாவிற்கு மயூ சொன்ன விசயம்– பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!