மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் நடிகர் விக்ரம் கோகலே சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார்.
காராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பழம்பெரும் நடிகர் விக்ரம் கோகலே. மேலும் இவர், 'ஹம் தில் தே சுகே சனம்', 'பூல் புலையா' போன்ற ஹிந்தி படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பெற்று இருந்தார்.
அத்துடன், கமல்ஹாசனின் 'ஹே ராம்' படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமானார்.
இவ்வாறுஇருக்கையில் , உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட விக்ரம் கோகலே, கடந்த 5-ம் தேதி புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்த போதிலும் அவருடைய இருதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால் கோமா நிலைக்கு சென்றார்.
இதையடுத்து அவர் வென்டிலேட்டர் சிகிச்சையில் வைக்கப்பட்டிருந்தார். இவ்வாறுஇருக்கையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரபல பாலிவுட் நடிகர் விக்ரம் கோகலே மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள்.
Listen News!