திரைப்பட நடிகர் மட்டுமல்லாது திரைப்பட தயாரிப்பாளர், பின்னணி பாடகர் மற்றும் குரல் நடிகர் என பன்முகத் திறமை கொண்டு விளங்குகின்ற ஒருவரே நடிகர் விக்ரம். இவர் தமிழ் சினிமாவில் 'சேது, விண்ணுக்கும் மண்ணுக்கும், சாமி, பிதாமகன்' போன்ற பல படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார். அதுமட்டுமன்றி பல திரைப்பட விருதுகளையும் வென்று இருக்கின்றார். அத்தோடு இவர் தொடர்ந்தும் சினிமாவிலேயே கவனம் செலுத்தி வருகின்றார்.
இந்நிலையில் தற்போது இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான திரைப்படமே 'கோப்ரா'. இந்தப் படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி செட்டி நடித்திருக்கின்றார். மேலும் இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் என்பவரும் முக்கியமான ஒரு வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் யாவும் முடிவடைந்த நிலையில் படத்தினுடைய சிங்கிள் பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தது.
இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் இசையில் உருவான இந்தப் பாடலை முதல் தடவை கேட்கும்போதே மனம் கொள்ளை போகும் அளவிற்கு அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் பா.விஜய்யின் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடலை வாகு மசான் என்பவர் பாடியுள்ளார். இந்த பாடலின் வீடியோ வெளியாகி இணையதளங்களில் பயங்கர வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அதுமட்டுமல்லாது இப்படத்தின் உடைய அட்டகாசமான டீசர் வெளியான காலத்திலிருந்தே அதில் இடம் பெற்றிருந்தது போன்றே அத்தனை கெட்டப்புகளில் விக்ரமை காண்பதற்கு பலரும் ஆர்வமுடன் உள்ளனர். மேலும் இப்படமானது வரும் ஆகஸ்ட் மாதம் 11-ஆம் திகதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இருந்தது. இவ்வாறாக இந்தப் படத்தினுடைய முதல் சிங்கிள் பாடல் ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் திகதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த 'உயிர் உருகுதே' என்ற இந்தப் பாடல் ஜூலை மாதம் 4-ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல் பாடலை போன்றே இந்த பாடல் தொடர்பாகவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. அதாவது இந்தப் பாடல் நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும் என்று சியான் விக்ரமின் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
பிற செய்திகள்
- நடிகை கீர்த்தி சுரேஷிற்கு விரைவில் திருமணமா? பெற்றோர் அளித்த பதில்
- ஹிப் ஹாப் ஆதியின் மனைவியை பார்த்துள்ளீர்களா…? இதோ புகைப்படம்…!
- முன்னழகு மொத்தத்தையும் காட்டிய நடிகை ராஷி கண்ணா-வைரலாகும் புகைப்படங்கள்..!
- திருமணத்திற்கு பிறகு ஷாருக்கானுடன் ‘அந்த’ காட்சியில் நடிக்கும் நயன்தாரா…வைரலாகும் தகவல்..!
- ரோஹித்தை மடக்கிப்பிடித்த வெண்பா; கண்ணம்மாவை அசிங்கப்படுத்தி அனுப்பிய பாரதி – இன்றைய எபிசோடு அப்டேட்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!