• Sep 21 2024

குடித்து விட்டு இயக்குநர்களிடம் கதை கேட்கும் நடிகர் விமல்- தவளை தன் வாயால் கெட்ட கதை இது தானா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக இருந்து பின்னர் கதாநாயகனாக மாறியவர் தான் விமல் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்றால் களவாணி திரைப்படம் தான். இதனைத் தொடர்ந்து இன்னும் பல படங்களில் நடித்திருக்கின்றார். இதனால் சினிமாவில் பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட விமலுக்கு திடீரென பட வாய்ப்புக்கள் குறைந்தன.

சில காலம் நடிக்காமல் இருந்த விமல் விலங்கு வெப் சீரிஸ் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.  மொத்தம் 7 எபிசோட்களாக உருவான விலங்கு வெப் சீரிஸ், கடந்தாண்டு பிப்ரவரி மாதம் ஜீ5 ஓடிடியில் வெளியானது. இதில் விமல், இனியா, முனிஸ்காந்த், பாலசரவணன், மனோகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். த்ரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டிருந்த அந்த வெப் சீரிஸ் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இதனை அடுத்து தெய்வ மச்சான், குலசாமி ஆகிய படங்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகின. ஆனால் அந்தப் படங்கள் தோல்வியையே சந்தித்தன. துடிக்கும் கரங்கள் படம் செப்டம்பர் 8ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதனால் படத்தின் விழாவில் பேசிய விமல் சினிமாவுக்கு வந்த புதிதில் என்ன ஏது என்றே தெரியாமல் பல கையெழுத்தை போட்டேன் என்று பேசினார். 


மேலும் இனி தெளிவாக இருப்பதாகவும் கூறியிருந்தார். இதனால் விமல் குடித்துவிட்டுத்தான் கதையே கேட்பார் என்று விஷயம் தெரியவந்திருக்கிறது.

அதாவது தினமும் மாலை காரை எடுத்துக்கொண்டு வெளியே வரும் விமல் தன்னிடம் ஏற்கனவே கதை சொல்லியிருந்தவர்களை கோடம்பாக்கத்தில் பார்த்தால், 'ஹலோ பிரதர் வாங்க' என காரில் ஏற்றிக்கொண்டு எங்கேயாவது சென்று குடித்துவிடுவாராம். 

அதுவரை அந்த இயக்குநரிடம் பேசிக்கொண்டே இருப்பாராம். பிறகு மீண்டும் அவரை ஒரு இடத்தில் இறக்கிவிடும்போது கையில் 2000 ரூபாயை கொடுத்து இன்னொரு நாள் வாங்க கதை சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றுவிடுவாராம். இதனாலேயே அவரை ஃபாலோ செய்வதை பலரும் நிறுத்திவிட்டார்களாம்.

 மேலும் நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டேன் என விமல் சொன்னதிலும் ஒரு காரணம் இருக்கிறதாம். அதாவது அவர் கையெழுத்து போட்ட பல சமயங்கள் விமல் நிதானத்திலேயே இருந்ததில்லையாம். அதனால்தான் அவருக்கு வீழ்ச்சி ஏற்பட்டதாம். இந்தத் தகவலை பிரபல பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement