தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் ஒருவராக தனது சாதனையை நிலை நாட்டி வருபவர் நடிகர் விமல். இவர் வெற்றியின் உச்சத்தை தொட வேண்டும் என்று போட்டி போட்டு நடித்து வரும் பல ஹீரோக்களில் ஒருவராகவும் இருந்து வருகின்றார். இவரது திரையுலக ஆரம்பப் பயணமானது சிறு சிறு கதாபாத்திரங்களின் மூலமாகவே ஆரம்பமானது.
அதாவது ஒரு சில படங்களில் பிரபல ஹீரோக்கள் பலருடனும் இணைந்து துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு இயக்குநர் பாண்டியன் இயக்கத்தில் வெளியான ‘பசங்க’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார். அப்படத்தின் மூலம் கிடைத்த வெற்றியானது இவரை மேலும் மேலும் பல படங்களில் நடிக்கத் தூண்டியது. இதனைத் தொடர்ந்து 'களவாணி', 'கலகலப்பு', 'வாகை சூடவா'போன்ற நகைச்சுவை மிகுந்த பல படங்களில் நடித்து பல ரசிகர்களின் மனதில் நீங்காத ஒரு இடத்தினைப் பிடித்துக் கொண்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் இவர் நடிப்பில் ‘விலங்கு’ என்ற வெப்தொடர் ஆனது வெளியாகி இருந்தது. இவ் வெப்தொடர் ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதற்குப்பின் பல சர்ச்சைகளில் மாட்டியிருக்கும் நடிகர் விமலின் பல தகவல்கள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் தற்போது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது யாருமே எதிர்பார்க்காத வண்ணம் நடிகர் விமலுக்கு அமெரிக்க தேசிய வணிக பல்கலைக்கழகம் ஒன்று “கௌரவ டாக்டர் பட்டம்” வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக நேற்றைய தினம் அமெரிக்க பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் "விமல் சமர்ப்பித்துள்ள சாதனைகள் மற்றும் பங்களிப்பை ஆராய்ந்தோம். இது குறித்து மகிழ்ச்சி அடைந்தோம். உங்களின் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கவை. உங்கள் விண்ணப்பத்தை கவனமாக மதிப்பாய்வு செய்த பிறகு எங்கள் கல்வி ஆலோசனை குழு உங்களுக்கு டாக்டர் ஆப் ஆர்ட்ஸ் என்ற பட்டத்தை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறது. எனவே எங்கள் பட்டமளிப்பு விழாவில் கௌரவ டாக்டர் பட்டதை பெற உங்களை அன்புடன் அழைக்கிறோம்" என தெரிவித்துள்ளது.
இந்த தகவலை அறிந்த விமல் ரசிகர்கள் தற்போது தலை கால் புரியாமல் சந்தோசத்தில் உள்ளனர். அதுமட்டுமன்றி தமது சமூக வலைத்தள பக்கங்களிலும் அந்த தகவலை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.
பிற செய்திகள்
- “எனது சந்தோசமே நீ தான்”…ஆர்யாவை புகழ்ந்து தள்ளிய சாயிஷா…வைரலாகும் பதிவு..!
- தவறாகப் பேசியவர்களை கை நீட்டி அடித்த ரெஜினா…அடடே ரொம்ப கோவக்காரியாக இருப்பாங்க போல..!
- தமிழ் சினிமாவின் நகைச்சுவைகளில் அறிவார்ந்த காலம் மலையேறி விட்டதா..?
- ஆர்யா-சந்தானத்துடன் மீண்டும் இணையும் கலக்கல் காமெடி திரைப்படம்…உருவாகவுள்ள பாகம்-2..!
- தாவணி போட்ட தீபாவளி பாடலில் இருந்து இன்றுவரை…நாங்க இரண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி மாதிரி; நடிகர் விஷால்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!