• Nov 17 2024

ஜெயிலர் படத்தினால் முன்னணி நடிகரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பைத் தவற விட்ட நடிகர் விநாயகன்- அடடே இந்த நடிகருடனா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜஜனிகாந்த நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் ஜெயிலர்.மிகுந்த எதிர்பார்ப்புக்களோடு வெளியாகிய இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அத்தோடு இப்டம் 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது.

இதற்கிடையே படத்தில் ஏகப்பட்ட விஷயங்கள் கொண்டாடப்பட்டன. அதில் ஒன்று வில்லன் கதாபாத்திரம். தமிழில் திமிரு, மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் விநாயகன் இதில் வில்லனாக நடித்திருந்தார். வர்மன் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்த அவர் மலையாளம் கலந்த தமிழில் பேசி நடிப்பில் மிரட்டி எடுத்துவிட்டார். 


இதனால் ரொம்ப வருடங்கள் கழித்து தமிழில் நடித்த விநாயகனுக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. மேலும் அவருக்கு தமிழில் படவாய்ப்புகள் குவிந்துவருவதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் ஜெயிலர் படத்தில் நடித்ததற்காக விநாயகனுக்கு 35 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதுகுறித்து விநாயகன் பேசுகையில், "ஜெயிலர் படத்தில் நடித்ததற்காக நான் 35 லட்சம் ரூபாய்தான் சம்பளமாக பெற்றேன் என தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் அதைவிட மூன்று மடங்கு அதிகமாகத்தான் சம்பளம் பெற்றேன்.


ஜெயிலர் படத்தின் ஷூட்டிங்கில் என்னை மிகவும் நன்றாகவும், அன்பாகவும் படக்குழு நடத்தினார்கள். எனது கரியரிலேயே அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடித்த படம் என்றால் அது ஜெயிலர்தான். அதனால்தான் தனுஷ் நடித்திருக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது" என்றார். விநாயகன் அடுத்ததாக ஒரு தமிழ் படத்தில் கமிட்டாகியிருப்பதாகவும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement