நடிகர் விஷால் நடிப்பில் திரைக்கு வந்த "மார்க் ஆண்டனி" படம் கடந்த செப்டம்பர் 14ம் தேதி தமிழில் ரிலீஸ் ஆனது. ஹிந்தியில் தாமதமாக செப்டம்பர் 28ம் தேதி தான் ரிலீஸ் ஆனது.
இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் வாங்குவதற்காக மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் 6.5 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கினார்கள் என விஷால் அதிர்ச்சி புகார் கூறி இருந்தார். விஷால் அளித்த புகாரின் பேரில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக விஷாலின் உதவியாளரிடம் நேற்று 9 மணி நேரம் சிபிஐ விசாரணை நடத்தியது. இந்நிலையில் நடிகர் விஷால் இன்று மும்பை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி இருக்கிறார்.இந்த விவகாரம் குறித்து தனது டுவிட் பக்கத்தில் "என் வாழ்க்கையில் சிபிஐ விசாரணைக்கு எல்லாம் செல்வேன் என நினைத்து கூட பார்த்ததில்லை" என விஷால் ட்விட்டரில் கூறி இருக்கிறார்.
Now on my way to CBI office in Mumbai for an enquiry regarding the CBFC case. Lol. Never ever thought I will be going to this office too in my life.
மேலும் விசாரணை முடிந்து வெளியே வந்த பிறகு தனது டுவிட் பக்கத்தில் சிபிஎஃப்சி வழக்கு தொடர்பான விசாரணைக்காக மும்பையில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு நான் வந்திருந்ததை முடித்தேன். இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது மேலும் விசாரணை நடத்தப்படும் விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. சிபிஐ அலுவலகம் எப்படி இருக்கும் என்பது குறித்தும் சில உள்ளீடுகளை எடுத்தார். Lol. நானும் இந்த அரசு அலுவலகத்திற்கு செல்வேன் என்று என் வாழ்நாளில் நினைத்ததில்லை. ரீல் வாழ்க்கையில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் ஊழலுக்கு எதிராக நிற்க முன்வர வேண்டும் என்று குறிப்பிட்டு டுவிட் செய்துள்ளார்.
Just finished my visit to CBI office in Mumbai for an enquiry regarding the CBFC case. Was a complete new experience and am glad the way the enquiry is being conducted. Took some inputs too about how a CBI office would look like. Lol. Never ever thought in my life I will be going…
Listen News!