• Sep 21 2024

நடிகர் விஷாலின் புதிய சாதனை... பாக்ஸ் ஆபிஸ் லிஸ்டில் இணையவுள்ள மார்க் ஆண்டனி

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

விஷால் நடிப்பில் உருவாக்கி தற்போது திரைக்கு வந்த மார்க் ஆண்டனி படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கிறது. தற்போது கிடைத்த தகவலின்படி மாவீரன் படத்தின் வசூலை முறியடித்து பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனைபடைத்துள்ளது மார்க் ஆண்டனி.

இதுவரைக்கும்  இப்படத்திற்கு எந்த ஒரு தடையும் இல்லாமல் நல்ல வசூல் வந்துகொண்டே இருக்கும் நிலையில், இதுவரை இத்திரைப்படம் உலகளவில் ரூ. 87 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இனி வரும் நாட்களில் ரூ. 100 கோடியை மார்க் ஆண்டனி நெருங்குமா என கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

ஏனென்றால் நாளை முதல் சந்திரமுகி 2, இறைவன், சித்தா என பல திரைப்படங்கள் திரைக்கு வருவதினால் கண்டிப்பாக மார்க் ஆண்டனி படம் ரூ. 100 கோடியை தொடுவது என்பது சந்தேகம் தான் இனி என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement