தமிழ்த்திரையுலகில் இயக்கம், நடிப்பு என இரு துறையிலும் முத்திரைப் பதித்துப் பிரபலமானவர் நடிகர் விசு. அதுமட்டுமல்லாது இவர் கடைசிக் காலத்தில் பாஜகவில் சேர்ந்து, ஆர்.எஸ்.எஸ் மேடையிலும் பேசிவந்தார். கடந்த 2020-ஆம் ஆண்டு, விசு சிறுநீரக பிரச்சினையால் காலமானார்.
நடிகர் விசுவைப் பொறுத்தவரை முதன்முதலில் கடந்த 1977-ஆம் ஆண்டு கே.பாலச்சந்தரின் 'பட்டினப்பிரவேசம்' என்னும் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து 'மணல் கயிறு, நல்லவனுக்கு நல்லவன், அருணாச்சலம்' உள்பட பல படங்களிலும் நடித்துள்ளார்.
இயக்குநர் விசு தன்னுடைய அடர்த்தியான வசனங்களால் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். அதிலும் குறிப்பாக அவர் படத்தில் இடம்பெற்ற "பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்குற பைத்திய வைத்தியருக்கே பைத்தியம் பிடிச்சா…அந்த பைத்திய வைத்தியர், எந்த பைத்திய வைத்தியரைப் போய் பார்ப்பாரு" என்னும் வசனம் இன்றும் ரொம்பப் பேமஸ்.
இதேபோன்று விசுவின் இயக்கத்தில் வந்த படங்கள் அத்தனையுமே குடும்பத்தோடு பார்த்து ரசிக்கக்கூடிய அளவிற்கு இருக்கும். கடந்த 1986-ஆம் ஆண்டு வெளியான 'சம்சாரம் அது மின்சாரம்' படம் தேசிய விருதும் பெற்றது.
1975-ஆம் ஆண்டு சுந்தரி என்பவரைத் திருமணம் செய்து கொண்டு குடும்ப பந்தத்தில் இணைந்த விசுவுக்கு, லாவண்யா, சங்கீதா, கல்பனா என மூன்று மகள்கள் உள்ளனர்.
விசு படம் என்றாலே நகைச்சுவைக்கும் பஞ்சமிருக்காது. அதேநேரத்தில் சன் டீவியில் 'அரட்டை அரங்கம்', ஜெயா டீவியில் 'மக்கள் அரங்கம்' என முக்கியமான சமூக அக்கறையுள்ள நிகழ்ச்சிகளையும் விசு தொகுத்து வழங்கியுள்ளார்.
இவ்வாறாக பல வழிகளிலும் மக்கள் மனதில் இடம் பிடித்த விசு தன் மனைவி, மகள்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரல் ஆகிவருகிறது.
அதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே விசுவின் மகள்களா இது? எனக் கேட்டு ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்துவருகின்றனர்.
Listen News!