• Sep 21 2024

கடனைத் திருப்பிக் கேட்ட நபருக்கு அரிவாளால் வெட்டிய நடிகர்- பரபரப்பில் திரையுலகம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

அய்யப்பனும் கோஷியும் என்ற படத்தில் சைமன் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபல்யமானவர் தான் வினீத் தட்டில் டேவிட்.மேலும் இது தவிர அங்கமாலி டைரீஸ், ஜூன், திருச்சூர் பூரம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து இருக்கிறார்.

அய்யப்பனும் கோஷியும் என்ற மலையாள படத்தில் பிருதிவிராஜ்,மற்றும் பிஜுமேனன் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

வினீத் தட்டில் சேர்ந்த துறவூரில் வசிக்கும் அலெக்ஸ் என்பவரிடம் கடன் வாங்கி இருந்ததாகவும், இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வினீத் தட்டில் டேவிட் வீட்டுக்கு சென்று ரூ.3 லட்சம் கடனை அலெக்ஸ் திருப்பி கேட்டுள்ளார். அப்போது வாய்த்தகராறு ஏற்பட்டு அலெக்சை வினீத் தட்டில் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அலெக்ஸ் கையில் காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து திருச்சூரில் வைத்து வினீத் தட்டில் டேவிட்டை கைது செய்தனர்.

மேலும் இது மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement