பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு கன்னட சேனலில், 'பதுக்கு ஜடக்காபண்டி' என்ற சட்ட நிகழ்ச்சியை நடத்தினார், மாளவிகா அவினாஷ். பிறகு, பல கன்னடப் படங்களில் நடித்தார். தமிழில் 'ஜேஜே' உட்பட எண்ணிக்கையில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும், தமிழில் தனக்கான இடத்தைப் பெற்றிருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன் முடிந்த 'செல்லமே' தொடரில் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார். நடிகை, வழக்கறிஞர், அரசியல்வாதி எனப் பன்முகம் கொண்ட மாளவிகாவிற்கு, 'KGF' ஜாக்பாட்டாக அமைந்திருக்கிறது. இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து, மாளவிகா சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார்.
அவர் கூறுகையில்;- ''என் சினிமா அனுபவத்தில், இவ்வளவு பிரமாண்டமான ஒரு படத்தைப் பார்த்ததில்லை. இந்தப் படத்தில் என்னைக் கமிட் பண்றதுக்கு, ரெண்டு வருஷம் முன்னாடியே கிட்டத்தட்ட பெரும்பகுதி படப்பிடிப்பை முடிச்சிருந்தாங்க. பிறகு என்னை எதுக்கு இயக்குநர் பிரஷாந்த் கூப்பிட்டார்னு தெரியாம போனேன்.கிட்டத்தட்ட அர்னாப் கோஸ்வாமி மாதிரி கம்பீரமா, நேர்மையா இருக்கணும்.. இப்படி கேரக்டரைப் பற்றி விளக்கிச் சொன்னதும், ஓகே சொல்லி நடிச்சேன்.
.இயக்குநர் பிரஷாந்த். படத்துல வொர்க் பண்ண யாரையும் ஷூட்டிங் ஸ்பாட்ல செல்போன் பயன்படுத்த அனுமதிக்கமாட்டார். படத்துல நடிச்ச ஆனந்த் நாக் பல வருட சீனியர். ஆனால், அவர்கிட்டகூட எந்தக் காம்ப்ரமைஸும் ஆனதில்லை அவர். டப்பிங் வொர்க்லகூட அந்த அர்ப்பணிப்பு இருந்தது. இன்னும் பலமுறை அந்தப் படத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது எவ்வளவுப் பெரிய விஷயம். ஹீரோ யாஷ்கூட நான் பல படங்கள்ல வொர்க் பண்ணியிருக்கேன். அவர் எனக்குத் தம்பி! அவருக்கும், படத்துல நானும் நடிக்கிறேன்னு கடைசியிலதான் தெரியும்.
நான் இவங்க வீட்டுக்கு போனத பாத்ததே இல்ல.படக்குழு அவ்ளோ ஹார்ட் ஒர்க் பண்ணியிருக்காங்க.யாஷ் 24 மணி நேர கடின உழைப்பால இந்தள்வுக்கு வளர்ந்து இருக்காரு.அவர மாதிரி ஆகுறதெல்லாம் ரொம்ப கஸ்டம் எல்லாமே கடவுள் கொடுத்த வரம் என்றே சொல்லுவேன்''.என கூறினார்.
Listen News!