• Sep 21 2024

சூர்யா 42 படத்தில் இணைந்த நடிகர்கள் மற்றும் நடிகைகள்-வைரலாகும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக  களமிறங்கிய நடிகர் சூர்யா தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகராக திகழ்கிறார்.

இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வசூலை அள்ளிக்குவித்து வரும் நிலையில் அவர் அடுத்தடுத்து சில முக்கிய திரைப்படங்களில் கமிட் செய்து வைத்துள்ளார்.

மேலும் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வந்த சூர்யா, திடீரென படத்தை நிறுத்திவிட்டு சிவா இயக்கும் படத்தில் நடிக்க சென்றுவிட்டார்.

அதன்படி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூர்யா 42 திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இப்படத்தை இரண்டு பாகமாக வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த இப்படத்தின் பூஜையிலும் அப்படத்தில் கதாநாயகி கலந்து கொள்ளவில்லை.மேலும்  இதில் நடிக்கும் கதாநாயகி குறித்தும் இன்னும் அறிவிக்கப்படாமல் இருந்து வருகிறது.

மேலும் இன்று சூர்யா 42 பட பூஜையின் முழு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவின் Description-ல் நடிகை திஷா பாட்னி நடிப்பதை குறிப்பிட்டுள்ளனர். அவருடன் யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.   





Advertisement

Advertisement