• Nov 11 2024

கேரவனில் நடிகர்கள் நடந்து கொள்ளும் விதம்: தயாரிப்பாளர் கே. ராஜனின் பரபரப்பு பேச்சு.!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளர் கே. ராஜன். இவர் பேட்டிகளிலும், திரைப்பட நிகழ்ச்சிகளிலும் தயாரிப்பாளர்கள் படும் கஷ்டங்கள் குறித்தும் வெளிப்படையாக பேசி வருகிறார். இந்நிலையில் ‘நாட் ரிச்சபில்’ என்ற படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர்கள் குறித்து ஆவேசமாக பேசியுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கே. ராஜன் பேசும் போது தமிழ் சினிமாவை தற்போது வாழ வைப்பது சின்ன பட்ஜெட் படங்கள் தான். மேலும் இந்த பெரிய பட்ஜெட் படங்கள் பண்றவங்க தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய துரோகம் செய்றாங்க. எடுக்குறது தமிழ் படம். அதுல நடிக்குறது தமிழ் ஹீரோ. படத்தை பார்க்க போறதும் தமிழ் ரசிகர்கள். ஆனா ஆந்திரா, ஹைதரபாத் ஆட்களை வைச்சு வேலை செய்யிறாங்க.

மேலும் இதைப்பற்றி ரஜினி கூடையும் பேசி இருக்கேன். சினிமா எடுக்குற தயாரிப்பாளர்கள் நல்லா இருக்கணும். அவுங்களுக்கு யாரும் துரோகம் பண்ணக்கூடாது. மேலும் இந்த நடிகர்களுக்கு என்ன நோவு. சும்மா ஜம்முன்னு குளு குளு கார்ல வர்றீங்க. அங்க கேரவன் ஏசில ஜாலியா சீட் ஆடுறீங்க. அப்பறம் குஜால் எல்லாம் பண்றீங்க. ஷாட்டுக்கு கூபிட்டா வர்றது இல்லை. ஒரு மணிநேரம் லேட் பண்ணா எவ்வளவு பணம் லாஸ் ஆகும் தெரியுமா.?

கேரவன்ல இருந்து ஸ்பார்ட்க்கு வர்றதுக்கு பவுன்சர். அத்தோடு மறுபடியும் கேரவனுக்கு வர்ற பவுன்சர். அப்படி என்ன கெட்டது பண்ணிட்டா. தீவிரவாதியா நீ. இங்க தயாரிப்பாளர்களுக்கு தான் பாதுகாப்பு இல்லை. எல்லாமே புரோடியூசருக்கு செலவு. மேலும் படம் எடுக்குறது பெரிய விஷயம் இல்லை. என்னமோ பண்ணி படத்தை எடுத்துறாங்க. ஆனா ரிலீஸ் பண்ண கஷ்டப்படுறாங்க. நல்ல படங்களை மக்கள் பார்க்க தயாரா இருக்காங்க.

அத்தோடு ஐம்பது லட்சம் சம்பளம் வாங்குற ஹீரோ நடிக்கிற படத்தை விட ஐந்து லட்சம் சம்பளம் வாங்குற சக ஹீரோ நடிக்கிற சின்ன பட்ஜெட் படங்களும் நல்லா ஓடுது. அதே மாதிரி இந்த நாட் ரிச்சபில் படம் மக்கள் கிட்ட ரீச் ஆகும். கதை தான் முக்கியம். கதாநாயகர்கள் அல்ல. சிக்கனமா படம் எடுங்க. அப்பறம் சினிமா திரும்ப வராது. இவ்வாறு பேசியுள்ளார் தயாரிப்பாளர் கே. ராஜன்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement