• Sep 20 2024

எய்ட்ஸ் விழிப்புணர்வு மேடையில் ஷில்பா செட்டிக்கு நடிகர் முத்தம்.. மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தி சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் கடந்த 2007-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் நடந்த எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று இருந்தார். இந்த நிகழ்ச்சியில் பிரபல ஹாலிவுட் நடிகர் ரிச்சர்டு ஹிரி என்பவரும் பங்கேற்றார். 


அந்த சமயத்தில் நிகழ்ச்சி மேடையில் வைத்து ஷில்பா ஷெட்டிக்கு நடிகர் ரிச்சர்டு முத்தம் கொடுத்தார். இவ்வாறு ஷில்பாவின் கன்னத்திலும், கையிலும் ரிச்சர்டு முத்தம் கொடுத்த சம்பவம் ஆனது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் நிகழ்ச்சி மேடையில் ஷில்பா மற்றும் ரிச்சர்டின் இந்த செயல் மிகவும் அருவருப்பாகவும், ஆபாசமாகவும் இருந்ததாகவும், இந்திய கலாசாரத்தை அவமதித்து விட்டதாகவும் கூறி வலதுசாரி அமைப்புகள் ஷில்பா ஷெட்டிக்கு எதிராக கடுமையான போராட்டத்தில் குதித்தனர். 


இதனையடுத்து ஷில்பா ஷெட்டி மற்றும் ரிச்சர்டு மீது ராஜஸ்தானில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்பு அந்த வழக்கானது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 2017-ஆம் ஆண்டு மும்பைக்கு மாற்றப்பட்டது. 

இவ்வாறாக பொதுஇடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்டதாக ரிச்சர்டு மற்றும் ஷில்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்ற வந்த நிலையில் வழக்கில் இருந்து நடிகர் ரிச்சர்டு விடுவிக்கப்பட்டார். 

இருப்பினும் நடிகை ஷில்பா ஷெட்டி மீது வழக்கு நடந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வழக்கில் இருந்து ஷில்பாவை விடுதலை செய்து மாஜிஸ்திரேட் கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் ஷில்பா நடிகர் ரிச்சர்டு ஹிரியின் செயலால் பாதிக்கப்பட்டவர், அவர் எந்த குற்றசெயலையும் செய்யவில்லை என்று கூறி வழக்கில் இருந்து கோர்ட்டு விடுவித்து ஷில்பா மீதான வழக்கையும் முடித்து வைத்தது. 

இந்நிலையில் பின்னர் வழக்கில் இருந்து ஷில்பா ஷெட்டி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மும்பை கீழமை கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை இன்றைய தினம் விசாரித்த நீதிபதி, ஷில்பா ஷெட்டி வழக்கை தள்ளுபடி செய்து மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்று கூறி அந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement