நடிகர் எம்.ஆர். ராதாவின் பேரனும், மறைந்த நடிகர் எம்.ஆர்.வாசுவின் மகனுமான வாசு விக்ரம் கடந்த 1988 ஆம் ஆண்டு வெளியான 'பாலைவனத்தில் பட்டாம்பூச்சி' என்கிற படத்தின் மூலம் குணச்சித்திர நடிகராக அறிமுகமானார். பின்னர் நீங்களும் ஹீரோதான், பரதன், மஞ்சு விரட்டு, சிவாஜி, எங்கள் ஆசான் உள்ளிட்ட சுமார் 50-திற்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடத்திலும், காமெடியனாகவும் நடித்துள்ளார்.
இவரின் நடிப்பில், மறைந்த நடிகர்களான எம்.ஆர்.ராதா மற்றும் இவரின் தந்தை எம்.ஆர். வாசுவின் நடிப்பை பார்க்க முடியும்.
சின்னத்திரையிலும்.இவரின் சித்தியான ராதிகா நடித்த சித்தி, செல்வி, செல்லமே, உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை 7 மணியளவில் மறைந்த நடிகர் எம்.ஆர்.ஆர் வாசுவின் மனைவியும், நடிகர் வாசு விக்ரமின் தாயாருமான லலிதாம்பாள் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு வயது 83. இவரின் உடல், கோடம்பாக்கம் ஆ.என்.நம்பியார் தெருவிலுள்ள வாசுவின் வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் திங்கள் கிழமை மாலை 2 மணியாளத்தில் ஏவி.எம் சுடுகாட்டில் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரின் இறப்புக்கு பிரபலங்கள்,குடும்ப உறவினர்கள் என பலரும் தங்களின் ஆழ்ந்த அனுதாபகங்களை கூறி வருகின்றனர்.
Listen News!