தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக விளங்குபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக் குவித்தது. இதனைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் ஓர் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் கடந்த . 2019ல் நடிகர் சங்கத் தேர்தல் இடம் பெற்றது. அதன் முடிவுகள் கடந்த மார்ச் 20ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் நாசர் - விஷாலின் பாண்டவர் அணி வெற்றி பெற்றது.
அதற்கு பிறகு தற்போது நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் இன்று ரஜினியை சந்தித்து பேசி இருக்கின்றனர். நடிகர் சங்கம் பற்றிய பல விஷயங்களை அவர்கள் பேசியதாக தெரிகிறது.
தென்னிந்திய நடிகர் சங்கம் என்கிற பெயரை தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் என பெயர்மாற்றம் செய்ய முயற்சி நடப்பதாகவும், அது பற்றி சூப்பர்ஸ்டாரிடம் கருத்து கேட்கவே இந்த சந்திப்பு என சொல்லப்படுகிறது.
தென்னிந்திய மொழி படங்கள் அனைத்தும் சென்னையில் படமாக்கப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த நடிகர் சங்கத்தில் தற்போது தமிழ் சினிமா நடிகர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அதனால் பெயர் மாற்றம் செய்வது பற்றி நீண்ட காலமாக பரிசீலிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- ‘அவரே உண்மையைச் சொன்னால் நல்லவராகத் தான் இருப்பார்’- பாக்கியா பேச்சால் கடும் குழப்பத்தில் நிற்கும் ராதிகா
- ‘நடிகையின் சம்மதத்துடன் தான் உறவு கொண்டோம்’- பரபரப்பான தகவலைக் கூறிய பிரபல நடிகர்
- இது ஒன்னு அப்பப்போ..பப்ளிசிட்டி பண்ணிக்கிட்டு இருக்கு-ஐஸ்வர்யா ரஜினிகாந்தை கலாய்த்த ரசிகர்கள்
- நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு அழைக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா?
- தனது கணவருக்கு விலையுயர்ந்த பைக்கை பரிசாகக் கொடுத்த மணிமேகலை-குவியும் பாராட்டுக்கள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!