• Sep 20 2024

பிரபல நடிகருடன் இரவு பார்ட்டியில் ஜாலி பண்ணும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்...தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களம் கொண்ட திரைப்படங்களில் நடித்து வருபவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் வெளியாகிய காக்க முட்டை, வடசென்னை, அட்டகத்தி ஆகிய படங்களில் அவரின் நடிப்பு கவனத்தை ஈர்த்தது.

கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் இவரது நடிப்பில் வெளியாகிய கனா ,க/பெ ரணசிங்கம் ஆகிய படங்கள் இவருக்கு பாராட்டுக்களைப் பெற்றுக் கொடுத்தது.



 தற்போது டிரைவர் ஜமுனா, மோகன் தாஸ், தி கிரேட் இந்தியன் கிட்சன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இவ்வாறுஇருக்கையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மீது தயாரிப்பாளர்கள் கடும்கோபத்தில் இருக்கிறார்கள்.

இப்படங்கள் வெளியாகாமல் இருக்கும் நிலையில், ஒரு படத்திற்காக 1.5 கோடி அளவில் சம்பளம் உயர்த்தி கேட்டது பலரை  பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் தனது தோழியான பிக்பாஸ் நடிகை சம்யுக்தா மற்றும் நடிகர் கதிருடன் இணைந்து இரவு பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார்.மேலும்  அந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.





Advertisement

Advertisement