பிரபல தயாரிப்பாளர் எம்.ஆர் சந்தானம் என்பவரின் மகனும், நடிகர் மற்றும் இயக்குநர் சந்தானபாரதியின் சகோதரருமான ஆர்.எஸ் சிவாஜி பன்னீர் புஷ்பங்கள் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கமிட்டாகி நடித்திருக்கின்றார்.
படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த ஆர்.எஸ்.சிவாஜி. 67 வயதாகும் இவர் இன்று உடல் நலக்குறைவு காரணமாக திடீரென இறப்புக்குள்ளானார்.
இதனால் கமல்ஹாசன், இயக்குநர் நெல்சன் எல்லாம் தமது இரங்கல்களைத் தெரிவித்து இருந்தனர். இவர் இறுதியாக நயன்தாரா நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நயன்தாராவின் அப்பாவாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் இவரது உடலுக்கு கமல்ஹாசனின் இரண்டாவது மகளும் நடிகையுமான அக்ஷரா ஹாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!