கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் கைதி. இப்படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடித்திருந்ததோடு இவருடன் நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட இன்னும் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
வலுவான திரைக்கதை, கார்த்தி மற்றும் படத்தில் இடம் பெற்றிருந்தோரின் அட்டகாசமான நடிப்பு உள்ளிட்டவற்றால் இப்படம் வேற லெவல் வெற்றி பெற்றது.தற்போது இந்த படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வதற்கு தயாரிப்பாளர்கள், நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.அந்த வகையில் கைதி ஹிந்தியில் ‘போலா’ என்ற பெயரில் உருவாக்கப்படுகிறது.
இதில் முன்னணி நடிகரான அஜய் தேவ்கன் நடிக்கிறார். அவருடன் தபு படத்தில் இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது அமலா பாலும் முக்கிய கேரக்டரில் இடம்பெறுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கைதி படத்தின் ரீமேக்காக போலா அமைந்தாலும் ஹிந்தி களத்திற்கு ஏற்ப சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை ஹீரோ அஜய் தேவ்கனே இயக்குகிறார்.இப்படத்தை டி சீரிஸ், ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மென்ட், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
தென்னிந்தியாவில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள அமலா பால் தற்போது முதன் முறையாக ஹிந்தி படத்தில் நடிக்கவுள்ளார்.
அமலா பால் நடிப்பில் டீச்சர், கிறிஸ்டோபர், திவிஜா படங்கள் மலையாளத்தில் உருவாகி வருகின்றன. பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள சர்வைவல் ஜானர் மலையாள படமான ஆடுஜீவிதம் படத்திலும் அமலா பால் முக்கிய கேரக்டரில் இடம்பெற்றுள்ளார்.
Listen News!