• Sep 21 2024

ஹனுமன் படத்தில் நடிகை அம்ரித்தாவின் கதாபாத்திரம் வெளியானது..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சின்னக் கதாபாத்திரங்களில் நடித்து வந்த அம்ரிதா, அட்லீ மற்றும் விஜய் கூட்டணியில் வெளியான 'தெறி' படத்தின் மூலம் ரசிகர் மத்தியில் கவனம் பெற்றார்.

இதன் பின்னர் விஜய் யேசுதாஸ் ஹீரோவாக நடித்த 'படைவீரன்' படத்தின் மூலம் அம்ரிதா கதாநாயகியாக நடித்தார். பின்னர் 'பிகில்' படத்தின் மூலம் இன்னும் பிரபலமானார்.கடைசியாக கவின் உடன் லிப்ட் படத்தில் நடித்திருந்தார்.

மேலும் அந்தப் படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இன்று அம்ரிதா தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்களும் திரைத்துறை பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். தெலுங்கு இயக்குநர் பிரசாந்த் வர்மா Awe படத்தின் மூலம் இந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

எனினும் தற்போது ஹனுமான் என்ற சூப்பர் ஹீரோ படத்தை இயக்கி வருகிறார். தேஜா சஜ்ஜா இந்தப் படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். நடிகை வரலட்சுமி சரத்குமாரும், அம்ரிதாவும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இன்று அம்ரிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஹனுமன் படக்குழுவினர் அவரின் கதாபாத்திரம் குறித்து சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.மேலும் மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் அம்ரிதா நடிக்கிறார். இந்தப் படம் தெலுங்கு, தமிழ், கன்னடா, மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement