கடந்த 2015ஆம் ஆண்டு பிரேமம் திரைப்படத்தின் மூலம் மலையாள திரைப்படத்துறையில் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இதை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக கோடி,சமீபத்தில் அதர்வாவுடன் தள்ளி போகாதே போன்ற படங்களில் நடித்துள்ளார்.
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சாய்பல்லவி, மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பிரபலங்கள் .நடித்திருந்தனர். இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. அதோடு 50 கோடிக்கு மேல் வசூலித்தது.
அதாவது இதுவரை மலையாள படங்களையே பார்க்காத சென்னை ரசிகர்களையும் மலையாள சினிமாக்கள் மீது காதல் கொள்ள வைத்த மேஜிக்கை செய்த படம் பிரேமம்.
இப்படம் வெளிவந்து 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதை முன்னிட்டு அப்படத்தின் கதாபாத்திர புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் அனுபமா. மற்றுமொரு கதாநாயகியான மடோனாவும் படத்தின் இயக்குநர் டைட்டில் கார்டை இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.
Listen News!