• Nov 19 2024

படப்பிடிப்பின் போது ஹுரோவுடன் சண்டை போட்ட நடிகை அனுபமா- இயக்குநருக்கு காத்திருந்த அதிர்ச்சித் தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தெலுங்கு இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபல்யமானவர் தான் அனுபமா பரமேஸ்வரன். இதனைத் தொடர்ந்து தெலுங்கில் பல வாய்ப்புகள் குவிந்து வருவதால் தெலுங்கு சினிமாவிலேயே நடித்து வருகின்றார்.

மேலும் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியாகியிருந்த கொடி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்த தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு சினிமாவிலேயே நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் அவர் DJ Tillu 2 என்ற படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோவுடன் சண்டைப்போட்டுவிட்டு படத்தில் இருந்தே வெளியேறி இருக்கிறார் என்கிற தகவல் மிகவும் பரபரப்பாக பரவி வருகிறது.


DJ Tillu படத்தின் வெற்றிக்கு பிறகு அதன் இரண்டாம் பாகத்தை Siddhu Jonnalagadda இயக்கி வருகிறார். அதில் ஹீரோயினாக நடிக்க அனுபமா தேர்வானார். ஷூட்டிங்கும் சில தினங்கள் நடைபெற்றது.

அதன் பின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சித்து மற்றும் அனுபமா இருவரும் சண்டை போட்டிருக்கிறார்கள். அதனை தொடர்ந்து அனுபமா படத்தில் இருந்தே விலகுவதாக தெரிவித்துவிட்டாராம். அதனால் தற்போது மடோனா செபாஸ்டியன் அந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


Advertisement

Advertisement