தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை அசின். இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.
இவ்வாறு பிஸி நடிகையாக இருந்த இவர் 2016-ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரின் என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் தற்போது அசின் - ராகுல் சர்மா ஜோடிக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக நேற்றைய தினம் தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
அதாவது ராகுல் சர்மாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், இதனை அறிந்த அசின் அவரை எச்சரித்தும், அவர் கேட்காத காரணத்தால் தான் அவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்து உள்ளதாகவும், தற்போது தனியாக தனது மகளுடன் வசித்து வருவதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இதுகுறித்து அவர்கள் இருவருமே எந்தவித அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் நடிகை அசின், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கி இருக்கிறார். இதனால் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய உள்ளமை கிடட்டத்தட்ட உறுதியாகி இருக்கின்றது.
Listen News!