தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகை பாவனா. இவர் தமிழில் ‘சித்திரம் பேசுதடி’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.
மேலும் இவர் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு மலையாள நடிகர் திலீப் அவர்கள் கூலிப் படையை ஏவி விட்டு இவரை கடத்தி துன்புறுத்தியதாக சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சை வெடித்தது.
இதனைத் தொடர்ந்தும் பாவனா மன உறுதியோடு படங்களிலும் விளம்பரங்களிலும் நடித்து வருகின்றார்.
அந்த வகையில் தற்போது பாவனா மலையாளத்தில் ‘என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்நு’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.
இந்த நிலையில் பாவனா அண்மையில் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கோல்டன் விசாவைப் பெற்றுக் கொண்டார்.அந்த நிகழ்ச்சிக்கு வந்த ஆடை தான் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரோல் ஆகி வருகிறது.
பாவனா அணிந்த ஆடைக்குள்ளே எந்த உடையும் அணியவில்லை என்றெல்லாம் பலர் விமர்சித்து கமெண்ட் போட்டு இருந்தார்கள்.இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாவனா அவர்கள் சோசியல் மீடியாவில் பதிவு ஒன்றைப் போட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியது, “எனது அன்புக்குரியவர்கள் காயமடையாமல் இருக்கவும், ஒரு நாள் எல்லாம் சரியாகிவிடும் என்றும் நான் முயற்சித்து கொண்டிருக்கும்போது எதிர்மறையான கருத்துக்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் மூலம் என்னை மீண்டும் இருளுக்கு இழுக்க முயற்சிப்பவர்கள் இருப்பதை அறியும்போது எனக்கு வேதனை அளிக்கிறது.
இதுபோன்ற செயல்கள் மூலம் தான் அவர்கள் சந்தோசம் காண விரும்பினால் நான் அவர்களைத் தடுக்கவில்லை என்று மன வேதனையுடன் பாவனா கூறி இருக்கிறார். மேலும், கை உயர்த்தும்போது தெரிந்தது உடல் அல்ல. அந்த உடையில் டாப்புடன் ஸ்லிப் என்ற பகுதியும் சேர்ந்துதான் வருகிறது.
#Bhavana #BhavanaMenon pic.twitter.com/8N8K40jSpn
ஸ்லிப் என்பது உடலின் நிறத்தில் உடலுடன் சேர்ந்து இருக்கும் டாப்பின் ஒரு பகுதிதான். இது புதிய கண்டுபிடிப்பு ஒன்றும் இல்லை. அந்த ஆடையை பயன்படுத்தியவர்களுக்கு அது தெரியும்.டாப் மட்டும் அணிந்துகொண்டு வெளியே போகும் நபர் அல்ல நான். எது கிடைத்தாலும் அதை வைத்து என்னை வேதனைப்படுத்தும் சிலர் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
Listen News!