பாலிவுட் சினிமாவின் முக்கிய நட்சத்திர ஜோடிகளாக விளங்குபவர்கள் நடிகை பிபாசா பாசு மற்றும் கரண் சிங் குரோவர் ஆவர்.
ஹிந்தி சினிமாவில் முக்கிய பிரபலங்கள் ஆக விளங்கும் இவர்கள் தமது திறமையான நடிப்பின் மூலம் சினிமாவில் இன்று வரை சிறந்த கதாநாயகர்களாக நீடித்து நிலை கொண்டனர்.
சிறந்த கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்வு செய்து நடிக்கும் நடிகை பிபாஷா பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரர் ஆவார். அதுமட்டுமல்லாது பிபாஷா பொதுவாக த்ரில்லரான படங்களிலும் நடித்துள்ளார் .
மேலும் இவர் ஆக்சன் நடிகர் கரண் சிங் குரோவர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டனர் அண்மையில் தம்பதிகள் இருவரும் பெற்றோரான செய்தியை ரசிகர்களுக்கு அறிவித்தனர். அது மட்டுமல்லாது அது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரல் ஆக்கி இருந்தனர்.
இந்நிலையில் தற்போது பிபாசாவினால் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டு, அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது தனது உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று வெளிப்படுத்தியுள்ளார்.
Listen News!