• Nov 17 2024

விஜய்யின் ரீல் தங்கையை திருமணம் செய்து ஏமாற்றிய பிரபலம்..? கைது செய்யக்கோரி நடிகை பரபரப்புப் புகார்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 'ப்ரண்ட்ஸ்' திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கைச்சியாகவும், சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்துப் ரசிகர்கள் மத்தியில் பேரும் புகழும் பெற்றவர் நடிகை விஜயலட்சுமி. 


சினிமாவில் இவர் பிரபல நடிகையாக இருந்தாலும் இவரின் நிஜ வாழ்க்கை சோகமான ஒன்றாகவே காணப்படுகின்றது. அந்தவகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர், "சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார்” என்று கூறி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டுத் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். 


இதனைத் தொடர்ந்து தற்போது விஜயலட்சுமி சீமான் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார். அதாவது நான் சீமானை திருமணம் செய்து கொண்டது உண்மை, நான் சீமானின் மனைவி தான்" எனக் கூறியுள்ளார். மேலும் விஜயலட்சுமியை மனைவியாகவும், கயல்விழியை துணைவியாகவும் வைத்துக்கொள்வதாக சீமான் கூறியதாக விஜயலட்சுமி தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


இவ்வாறாக தன்னை திருமணம் செய்து ஏமாற்றிய சீமானை கைது செய்ய வேண்டும் என இன்று சென்னை மாநகர காவல் ஆணையரை சந்தித்து நடிகை விஜயலட்சுமி மீண்டும் புகாரளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement