• Sep 20 2024

மரணப் படுக்கையில் மகள்... கைவிட்ட வைத்தியர்கள்... தெய்வத்திடம் சரணடைந்த நடிகை தேவயானி...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

90கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் தேவயானி. 1995 -ஆம் ஆண்டு வெளியான தொட்டா சிணுங்கி என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் 'காதல் கோட்டை' என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.


இதனைத் தொடர்ந்து மேலும் பல படங்களில் நடித்து வந்த இவருக்கு திருமணமாகி தற்போது 2பெண் குழந்தைகள் உள்ளனர். இதனால் வெள்ளைத்திரை வாய்ப்பு குறைந்தமையினால் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். 


இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டியொன்றில் தன் வாழ்க்கையில் கஷ்டம் ஏற்படும் போது கடவுள் காப்பாற்றிய சம்பவம் குறித்து தேவயானி பகிர்ந்துள்ளார். அந்தவகையில் தேவயானியின் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் கணவர் ராஜகுமாரன் இயக்கிய ஒரு படத்தினை தயாரித்துள்ளார்.


அந்தப் படம் உருவாகும் சந்தர்ப்பத்தில் பல பிரச்சனைகள் வந்தது. இதனால் ஆஞ்சநேயரையும் அம்மனையும் கும்பிட்டு வந்துள்ளார். அதன்பின்னர் தான் அந்த படம் ரிலீஸ் ஆனதாக அவர் கூறியிருக்கிறார். 


அதேபோல் இன்னொரு பிரச்சினையும் நிகழ்ந்துள்ளது. அதாவது அவரது இரண்டாவது மகள் டெங்கு காய்ச்சல் வந்து மிகவும் சீரியஸாக படுத்த படுக்கையாக இருந்தார். இதனால் டாக்டர்கள் கூட தங்களால் முடியாது என்று கைவிட்டுவிட்டார்கள். 

இதனைத் தொடர்ந்து மறுபடியும் அம்மன் மற்றும் ஆஞ்சநேயரை கும்பிட்ட போது மகளின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டு மீண்டு வந்தாள் என்று உணர்ச்சி பூர்வமாக தேவயானி அப்பேட்டியில் கூறியிருக்கிறார்.

Advertisement

Advertisement