தமிழ் சினிமாவில் சிம்பு நடித்த ‘குத்து’ படத்தின் மூலம் அறிமுகமானவர் திவ்யா ஸ்பந்தனா. இதனையடுத்து தனுஷ் உடன் ‘பொல்லாதவன்’, அர்ஜூன் உடன் ‘கிரி’, இயக்குநர் கௌதம் மேனனின் ‘வாரணம் ஆயிரம்’ போன்ற படங்களில் இவர் நடித்திருந்தார்.
சினிமாவில் படு பிசியாக நடித்து வந்த திவ்யா ஸ்பந்தனா, காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலில் கால்பதித்தார். அந்தவகையில் கர்நாடகாவில் மாண்டியா தொகுதியில் 2013ஆம் ஆண்டு ஜெயித்த திவ்யா எம்பியானார். இருப்பினும் அதனைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.
இந்நிலையில் தற்போது இவர் மீண்டும் சினிமாவில் குதிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சமீபத்தில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் திவ்யா தனக்கு தற்கொலை எண்ணம் எழுந்ததாகவும் தான் போராடி வெளிவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் அவர் கூறுகையில் "எனது தந்தையை இழந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு நான் நாடாளுமன்றத்தில் இருந்தேன். நான் நாடாளுமன்றத்தில் இருந்ததால் வேலைப்பளு அதிகமாக இருந்தது. என் வீட்டினருடன் இதனால் நேரத்தை செலவழிக்க முடியவில்லை. என் அப்பா திடீரென்று ஒரு நாள் உயிரிழந்துவிட்டார். நாடாளுமன்ற நடவடிக்கைகள் பற்றி கேட்க கூட எனக்கு யாரையும் தெரியாது, எதைப்பற்றியும் தெரியாது.
அந்தசமயத்தில் நான் மிகுந்த மன அழுத்தத்துக்கு சென்றேன். ஏன் வாழ வேண்டும், தற்கொலை செய்து கொள்ளலாம் என எண்ணி முடிவெடுத்தேன். ஆனால் பின்னர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன ஆறுதல், தைரியம் ஆகியவற்றை அளித்தார். என் துக்கத்தை என் வேலையை நோக்கி செலுத்தினேன். எனக்கு ஊக்கம் கொடுத்தவர்களில் முக்கியமானவர்கள் என் அம்மா, அடுத்தது என் தந்தை, மூன்றாவது ராகுல் காந்தி. இப்படிப்பட்ட சூழலில் ராகுல் காந்தி எனக்கு உதவினார்" என திவ்யா ஸ்பந்தனா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு திவ்யா ஸ்பந்தனா குறித்த இந்தத் தகவல் ஆனது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. மேலும் ஒரு நடிகையாக இருந்தும் மன அழுத்தத்தால் தற்கொலை செய்ய முடிவெடுத்த என்று கூறிய இந்த விடயமானது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Listen News!