• Sep 20 2024

மாஸ் லுக்கில் கியூட்டா டான்ஸ் போட்ட சீரியல் நடிகை கேப்ரியல்லா சார்ல்டன்..! வைரல் வீடியோ இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் சீரியல் நடிகையாக இல்லங்கள் தோறும் மக்களை கவர்ந்து வருபவர் நடிகை கேப்ரியல்லா சார்ல்டன். இவர் முதலில் “ஜோடி ஜூனியர்” என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 சி என்ற நாடகத் தொடரில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார்.

அதன் பின்னர் குழந்தை நட்சத்திரமாக தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். தொடர்ந்து சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்து வந்தார். 


பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கேப்ரியல்லா , சிறப்பாக கேமை விளையாடினார் அதில் இறுதி சுற்றுவரை செல்லமுடியவில்லை என்றாலும். பிக்பாஸ் கொடுத்த ஆஃபர்ரை பயன்படுத்திக்கொண்டு 5 லட்சம் ரூபாயுடன் கேப்ரில்லா போட்டியை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் சீரியல் வாய்ப்புகள் கிடைக்க ஈரமான ரோஜாவே சீரியலில் காவ்யா என்ற ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்துவிட்டார்.

சமூகவலைத்தளங்களில் எப்போவும் ஆக்ட்டிவ் - ஆக இருக்கும் இவர் தற்போது கிளாமர் மாடல் உடையில் வீடியோ செய்து தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement