• Sep 20 2024

திடீரென மொட்டையடித்த நடிகை காயத்ரி ரகுராம்..ஏன் தெரியுமா? ஷாக்கான ரசிகர்கள்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் விசில் படம் மூலம் அறிமுகமானவர் காயத்திரி ரகுராம். அதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒப்பரப்பான முதல் பிக்பாஸ் சீசன்னில் கலக்கியவர். மிகவும் பிரபலமான நடன இயக்குநர் “ரகுராம்”, இவரது மகள் காயத்திரி ரகுராம், நடன இயக்குநராக மட்டும் இல்லாமல் நடிகையாகவும் வெள்ளித்திரையில் மின்னியவர்.

கடந்த 2002 ஆம் ஆண்டு சார்லி சாப்ளின் திரைப்படத்தில் ஒரு நடிகையாக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார், சில வருட இடைவெளிக்குப் பிறகு, அவர் 2008 இல் திரைப்படங்களில் நடன அமைப்பு செய்யத் தொடங்கினார். இவர் பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பேரவையின் மாநிலத் தலைவராகவும் பதவி வகித்தார்.

நடிகை காயத்ரி ரகுராம் தனது 22 வது வயதில் அமெரிக்க மென்பொருள் பொறியாளர் தீபக் சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  ஒரு சில ஆண்டுகள் அவருடன் சேர்ந்த வாழ்ந்த இவர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். தற்பொழுது தனித்தே வாழ்ந்து வருகிறார் நடிகை காயத்ரி ரகுராம்.

சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர், தற்பொழுது தனது 10 வருட ஆசை நிறைவேறிவிட்டதாக மொட்டையடித்தவாறு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது நடிகை காயத்ரி திருப்பதிக்கு சென்று மொட்டையடித்து வழிபட்டுள்ளார் என்பது போல் தான் தெரிகிறது.

இதோ அந்த வீடியோ!

Advertisement

Advertisement