தமிழ் சினிமாவில் விஜய் விஷால் தனுஷ் எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபல்யமானவர் தான் ஹன்சிகா. இவர் நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள திரைப்படம் தான் மஹா. இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் சிம்புவும் நடித்திருந்தார்.
இப்படத்தை 'ரோமியோ ஜூலியட்' படத்தின் இயக்குநர் லக்ஷ்மணிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய யு.ஆர்.ஜமீல் இயக்கியுள்ளார். எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் என்பவர் தயாரித்துள்ளார்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இப்படத்தில் ஹன்சிகா லீட் ரோலில் நடித்துள்ளார். இப்படம் ஹன்சிகாவின் 50வது படமாகும். அத்தோடு இவருடன் ஸ்ரீகாந்த், கருணாகரன், தம்பி ராமைய்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
விமானப் பெண்ணாக இருக்கும் ஹன்சிகா, பைலட் ஜமீலாக வரும் சிம்புவை காதலிக்கிறார். இவர்களுக்கு பிறக்கும் பெண் குழந்தை கொல்லப்படுகிறது. குழந்தையை கொன்றது யார் என்பதை கதாநாயகி ஹன்சிகா கண்டுபிடிப்பது தான் கதை. மாலிக் ஸ்ட்ரீம்ஸ் மற்றும் எட்செட்ரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மஹா திரைப்படம் கடந்த ஜூன் 10 ஆம் தேதி ரிலீஸாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டு, வருகிற ஜூலை 22ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!