• Sep 20 2024

கல்யாணம் நெருங்கும் நேரத்தில் பாச்சிலர் பார்ட்டியை கொண்டாடிய நடிகை ஹன்சிகா-வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பப்ளி நாயகி ஆக அறிமுகமாகி ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட, நடிகை ஹன்சிகா.மும்பையை சேர்ந்த இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு பாலிவுட் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர். இதைத்தொடர்ந்து கடந்த 2007 ஆம் ஆண்டு தெலுங்கில்  நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்தார்.

தன்னுடைய முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதையும் பெற்றார்.இதை தொடர்ந்து, ஹிந்தி, கன்னடா, போன்ற மொழிகளில் நடித்த நடிகை ஹன்சிகா... தமிழில் 2011 ஆம் ஆண்டு நடிகர் தனுஷுக்கு ஜோடியாக 'மாப்பிள்ளை' படத்தின் மூலம் அறிமுகமானார்.


கொழுக்கு மொழுக்கு அழகில் தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கவர்ந்த ஹன்சிகாவுக்கு தொடர்ந்து விஜய், ஆர்யா, சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில், திடீரென பிரபல தொழிலதிபர் சோஹல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ள தகவலை, ரொமான்டிக் புகைப்படம் வெளியிட்டு அறிவித்தார்.அதன்படி ஹன்சிகாவின் திருமணம் டிசம்பர் 4 ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரண்மனையில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

இந்த நிலையில் ஹன்சிகா தனது நண்பர்களுடன் இணைந்து பாச்சிலர் பார்ட்டி கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
















Advertisement

Advertisement