• Nov 14 2024

நடிகை ஹன்சிகாவிற்கு விரைவில் திருமணம்-யார் மாப்பிள்ளை தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை ஹன்சிகா.வர் தமிழில் விஜய் ,சூர்யா, கார்த்தி, விஷால் எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

தொடர்ந்து சில காலம் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள சோலோ ஹீரோயினாக பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

இவர் பார்ப்பதற்கு இளம் வயது குஷ்பு போன்றே இருந்ததால் இவரை ரசிகர்கள் செல்லமாக குட்டி குஷ்பு என்றும் அழைத்தனர். பின்னர் உடல் எடை கூடியதன் காரணமாக இவருக்கு பட வாய்ப்புகளும் குறைய ஆரம்பித்தது.

எனினும் இதன் பின்னர் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து உடல் எடையை குறைத்த ஹன்சிகாவிற்கு சமீப காலமாக பட வாய்ப்புகள் குவியத் தொடங்கி உள்ளன. தற்போது இவர் கைவசம் தமிழில் 4 படங்கள் தெலுங்கில் 3 படங்கள் என அரை டஜன் கணக்கிலான படங்கள் உள்ளன. சமீபத்தில் இவரின் 50-வது படமான மஹா வெளியானது.

மேலும் இப்படத்தில் அவரது முன்னாள் காதலனான சிம்புவும் நடித்திருந்தார். இந்த ஜோடியின் காதலுக்கு ஏற்பட்ட நிலைமை தான் இப்படத்துக்கும் நடந்தது. காதலைப் போல் இப்படமும் பிளாப் ஆனது. இந்நிலையில் நடிகை ஹன்சிகா திருமணத்துக்கு தயாராகி வருவதாக திரையுலக வட்டாரத்தில் தகவல் கசிந்துள்ளது.

காதல் எதுவும் செட் ஆகாததால் வீட்டில் பார்க்கும் பையனுக்கே ஓகே சொல்லிவிட்டாராம் ஹன்சிகா. அதன்படி அவருக்கு பிரபல அரசியல்வாதியின் மகனுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து ஹன்சிகா தரப்பில் இருந்து எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை. அத்தோடு சினிமாவில் தற்போது பிசியான நடிகையாக வலம் வரும் ஹன்சிகாவின் திருமணம் குறித்த செய்தி தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement