• Sep 20 2024

தனது அழகின் ரகசியத்தைப் போட்டுடைத்த நடிகை ஹனிரோஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ஹனி ரோஸ் மலையாளத் திரைப்பட நடிகையாவார். இவர் சில தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்தவகையில் தமிழில் 'முதல் கனவே, சிங்கம்புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன்' உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.


மேலும் மலையாள பட உலகிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். அத்தோடு தெலுங்கிலும் நடிக்கிறார். இன்னொரு முக்கிய விடயம் என்னவெனில் ஹனிரோசுக்கு ரசிகர்கள் கோவில் கூடக் கட்டி உள்ளனர். இந்த தகவலை ஹனிரோஸே பேட்டி ஒன்றில் நிருபர்களிடம் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில் ஹனி ரோஸ் சமீபத்தில் அளித்த மற்றோர் பேட்டியிலே தனது அழகின் ரகசியம் குறித்துக் கூறுகையில் ''நான் சில பவுடர்களை பயன்படுத்தித்தான் எனது அழகை மெருகூட்டிடுவேன், அதற்காக நான் அறுவைச்சிகிச்சை செய்யவில்லை" எனக் கூறியுள்ளார்.


எனவே இதன் மூலமாக ஹனிரோஸ் தனது அழகினை அதிகரிப்பதற்காக அறுவைச் சிகிச்சை எதுவும் செய்து கொள்ளவில்லை என்பது ரசிகர்களுக்குத் தெளிவாகியுள்ளது.

Advertisement

Advertisement