• Nov 14 2024

கொடிய நோயால் பரிதாபமாக இறந்து போன நடிகை ஜோதி.. இவர் ரஜினி, மோகன், டி.ராஜேந்தர் கூட இணைந்து நடித்திருக்கிறாரா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

'ரயில் பயணங்களில்' என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஜோதி. ஆரம்பத்தில் இவர் நடித்த ஒரு சில படங்கள் ரொம்பவே ஹிட் ஆகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பேரையும், புகழையும் சம்பாதித்தார். இதனால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிக்கலாம் என்ற எண்ணத்தோடு இருந்த இவருக்கு அடுத்தடுத்து பல சோகங்கள் இடம்பெறத் தொடங்கின. இறுதியில் மிகவும் கொடுமையான முறையில் அவர் இறந்து போனார். இந்நிலையில் இவரது வாழ்க்கை பயணம் குறித்து முழுமையாக தெரிந்து கொள்வோம். 


1963 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் இதுவரைக்கும் 50இற்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். ஆனால் இவரது ஹேரியரிலே ரொம்ப சூப்பர் ஹிட்டான திரைப்படம் என்றால் அது ரஜினியுடன் இணைந்து நடித்த 'புதுக்கவிதை', டி.ராஜேந்தருடன் இணைந்து நடித்த 'ரயில் பயணங்களில்' போன்றவை தான். 

இதில் புதுக்கவிதை என்ற படத்தில் இடம்பெற்ற 'வெள்ளை புறா' என்ற பாடல் இன்றளவும் பல ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கின்றது. 

இவரது சினிமாப் பயணம் ஆரம்பித்தது 1979 ஆம் ஆண்டு வெளியான 'தூர்ப்பு வெள்ளி ரயிலு' படத்தின் மூலம் தான். தெலுங்குத் திரைப்படமான இதில் அலமேலு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 1980 இல் 'வம்ச விருட்ஷம்' என்ற இன்னொரு தெலுங்குப் படத்திலும் நடித்தார். இதில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றிருக்கின்றார்.


அதன் பின்னர் 1981 இந்த மூலமாக 'ரயில் பயணங்களில்' என்ற திரைப்படம் மூலம் தமிழில் காலடி எடுத்து வைத்தார். இதனைத் தொடர்ந்து ஏராளமான தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். 

சில வருடங்களுக்குப் பின்னர் அவருக்குப் பட வாய்ப்புக்கள் குறைந்ததால் சித்தி, அம்மா, அண்ணி, தங்கை போன்ற கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கத் தொடங்கினார். அந்தவகையில் குறிப்பாக 2000 காலப்பகுதியில் வெளிவந்த 'பார்த்தேன் ரசித்தேன், வண்ணத் தமிழ்ப் பாட்டு, உள்ளம் கொள்ளை போகுதே' போன்ற பல படங்களை குறிப்பிட முடியும்.

இறுதியாக 2003 ஆம் ஆண்டில் 'அன்பு' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதன் பின்னர் எந்தத் திரைப்படங்களிலும் நடிக்கவில்லை.  மேலும் இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உண்டு. கணவருடன் இடம்பெற்ற கருத்து வேறுபாடுகளால் விவாகரத்து செய்து கொண்டார். 

இவருக்கு யாருமே எதிர்பாராத வகையில் மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டது. இதனை ரொம்ப தாமதமாகத் தான் கண்டு பிடித்தார்கள். இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள முயன்ற போது அதற்கு அவரது உடல் ஒத்துக் கொள்ளவில்லை. 

இவர் தனது கடைசி நாட்களில் ஈசியாறில் இருக்கக்கூடிய ஒரு வீட்டில் தனது மகளுடன் தான் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் மார்பகப் புற்றுநோயினால் 2007 மே 18-ஆம் திகதி தனது 44ஆவது வயதில் காலமானார். 

Advertisement

Advertisement