• Sep 20 2024

நடிகர் மம்முட்டிக்கு ஜோடியாகும் நடிகை ஜோதிகா... நவம்பரில் திரைக்கு வரும் காதல்-தி கோர் திரைப்படம்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

மலையாள நடிகர் மம்முட்டி மற்றும் நடிகை ஜோதிகா நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் காதல்-தி கோர். இது ஜியோ பேபி இயக்கி எழுதிய மலையாளத் திரைப்படம். இப்படத்தில் மம்முட்டி மற்றும் ஜோதிகா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  குடும்ப நாடகம் என்று சொல்லப்படும் இப்படத்தில் நடிகர் மம்முட்டி அரசியல்வாதியாக நடிக்கிறார். இவரது மனைவியாக தமிழ் நடிகை ஜோதிகா  நடித்துள்ளார். 


காதல்-தி கோர் இந்த ஆண்டு வெளியாகும் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாகும். இது ஜோதிகாவுடன் நடிகர் மம்முட்டியின் முதல் படமாக அமைகிறது. இப்படத்தில் மம்முட்டி தவிர, நடிகர்கள் லாலு அலெக்ஸ், முத்துமணி, சின்னு சாந்தினி மற்றும் சுதி கொப்பா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.


இப்படத்தை மம்மோட்டி தனது தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பனியின் பேனரில் தயாரித்துள்ளார் மற்றும் வேஃபேரர் பிலிம்ஸ் விநியோகம் செய்கிறது. IFFI கோவா 2023 கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் 'காதல்-தி க்ரோர்' திரையிடப்படும் என தகவல் கிடைத்துள்ளது. திரைப்பட விழா நவம்பர் 20ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 'காதல்-தி க்ரோர்'  திரைப்படம்   நவம்பர் 2023 இல் திரையரங்குகளில் வெளியிடப்படும்.

Advertisement

Advertisement