முக்கிய நடிகையாக திகழும் நடிகை ஜோதிகா 71 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
1999-ஆம் ஆண்டு 'வாலி' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகவானவர் தான் நடிகை ஜோதிகா.இவர் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து 'குஷி, டும் டும் டும், தூள், திருமலை, மொழி, சந்திரமுகி, வேட்டையாடு விளையாடு' என ஏராளமாக வெற்றி படங்களைக் கொடுத்திருக்கின்றார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த போது சூர்யாவுடன் இணைந்து ஒரு சில காதல் படங்களில் நடித்திருக்கின்றார். இதனைத் தொடர்ந்து அவர்களது நிஜ வாழ்க்கையிலும் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது.
இந்நிலையில் நடிகர் சூர்யாவை ஜோதிகா கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார்.
இதன் பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அதன்படி கடைசியாக அவர் நடிப்பில் உடன்பிறப்பபே திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இவ்வாறுஇருக்கையில் தற்போது மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடிப்பில் உருவாகும் மலையாள திரைப்படத்தில் நடிகை ஜோதிகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
பேமிலி டிராமா திரைப்படமாக உருவாகும் அப்படத்தை Jeo Baby இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Listen News!