கடந்த 2004ல் ஹோ கயா நா என்ற பாலிவுட் படத்தில் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால்.இப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் 2007ல் லட்சுமி கல்யாணம் என்ற படத்தில் என்ட்ரி கொடுத்தார்.அதன் பின்னர் தமிழில் பரத் நடிப்பில் வெளியான பழனி என்னும் படத்தில் அறிமுகமானார்.
இப்படத்தினைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என தன்னை பிசியாக்கிக் கொண்ட காஜல் அகர்வாலுக்கு ராம்சரணுடன் நடித்த மகதீரா திரைப்படம் சிறந்த நடிகையாக அறிமுகப்படுத்தியது. இதனால் தமிழில் விஜய் விஷால் தனுஷ் ஜெயம் ரவி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.
இதையடுத்து கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார். இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீல் என்ற ஆண்குழந்தை பிறந்துள்ளது.
இவ்வாறுஇருக்கையில் குழந்தை பிறந்தும் 4மாதங்கள் ஆகிய நிலையில் கவர்ச்சி குறையாது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தமது லைக்ஸ்களை அள்ளிக்குவித்து வருகின்றனர்.
Listen News!