தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால்.கடந்த 2008 -ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான பழனி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு நடிகரான ராம்சரணுடன் இணைந்து மகதீரா என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இப்படம் இவருக்கு சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்று கொடுத்தது. அதனைத் தொடர்ந்து தமிழில் விஜய் விஷால் தனுஷ் ஜெயம் ரவி சூர்யா கார்த்தி என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்தார். தெலுங்கிலும் மகேஷ்பாபு ராம்சரண் நானி எனப் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.
இந்த நிலையில் இவர் கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கௌதம் கிச்சிலு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களது ஹனிமூன் புகைப்படங்களும், ரொமாண்டிக் புகைப்படங்களும் அவ்வப்போவது வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தன.
காஜல் அகர்வால் கர்ப்பகால போட்டோஷூட் நடத்தி ரசிகர்களுக்கு தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு நீல் என பெயர் வைத்திருந்தனர். ரசிகர்கள் பலரும் காஜல் அகர்வாலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதனிடையே தற்போது கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ள காஜல் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
அப்படி அவர் நீச்சல குள உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
பிற செய்திகள்
- ஒரே நேரத்தில் உயிரை விட்ட ஜானகி, ராமன் தம்பதி.. செய்த சத்தியத்தால் பாரதி எடுத்த முடிவு – இன்றைய எபிசோட் அப்டேட்
- விருது விழாவுக்கு எல்லை மீறிய கவர்ச்சி உடையில் வந்த ராஷ்மிகா- வைரலாகும் வீடியோ
- பிரச்சனையின் முதல் கட்டமாக வாய் திறந்த கோபி; ராதிகா எடுத்த முடிவு – இன்றைய எபிசோட் அப்டேட்
- “சியான் 61” படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்..!
- பிரதாப் போத்தனுக்கு ஒரே ஒரு மகள் தானாம்-அவர் என்ன செய்கிறார் தெரியுமா..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!