ஹோ கயா என்ற ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். பின்னர் லக்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தில் நடித்து தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமானார். தொடர்ந்து நடிகர் பரத்துடன் பழனி திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் அவ்வளவு வசூலை கொடுக்கவில்லை.
இருப்பினும் நடிப்பை கைவிடாத நம்ம காஜல் 2009-இல் நடித்த மகதீரா திரைப்படம் மிகப்பெரிய சாதனை வசூல் செய்தது. இதன் மூலம் மிக பிரபலமான நடிகை காஜல் தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வருகின்றார்.
இவ்வாறு, சினிமாவில் பிசியாக நடித்து வந்த காஜல் விஜய், அஜித், சூர்யா, போன்ற தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடனும், தெலுங்கு சினிமா முன்னணி நடிகர்களுடனும் நடித்தார்.
கடந்த 2020இல் கௌதம் கிச்சலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல்அகர்வால் கடந்த ஆண்டு கர்ப்பம் ஆனதால் கைவசம் இருந்த படங்கள் ஒவ்வொன்றாக கைநழுவிப் போனது.இதை பற்றி எல்லாம் கவலைப்படாத காஜல் தான் அம்மாவாகப் போவதை நினைத்து மிகுந்த உற்சாகத்தில் இருந்தார்.
பின் நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளியே வர ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறி வந்தனர். கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் நடிகை காஜல் அகர்வால் நிறைய போட்டோ ஷூட் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 19 நடிகைகாஜல்-கௌதம் தம்பதியினருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தற்போது நடிகை காஜல்அகர்வால் தன் அழகிய ஆண்குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்படியே அம்மாவைப் போல உள்ளாரே என்று தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்..
பிற செய்திகள்
- நிஜ வாழ்க்கையில் காரில் கடத்தப்பட்ட நமீதா… போலீசாரிடம் சிக்கிய நபர்; நடந்தது என்ன..?
- பாலியல் தொழில் செய்ய சொல்லி மிரட்டல்- துணை நடிகை விடுத்த பரபரப்பு புகார்…!
- நடிகர் தனுஷின் தாய்க்கிழவி பாடலின் மீது எழுந்துள்ள புகார்-காரணம் என்ன தெரியுமா..?
- தூக்கிட்ட நிலையில் பிரபல நடிகர் -அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
- பாலிவுட் நடிகைகளுக்கு வேறு..தமிழ் நடிகைகளுக்கு தான் இப்படி: உண்மையை உடைத்த பிரியாமணி..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!