சினிமாத் திரையுலகிலே வெள்ளித்திரை, சின்னத்திரை என கலக்கிய ஒருவரே நடிகை கல்யாணி. இவர் சிறுவயதிலேயே நடிக்க வந்தவர். அந்தவகையில் இவர் 300 விளம்பரங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் 2001 முதல் 2009 வரை தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிப் படங்களிலும் நடித்தார். அதுமட்டுமல்லாது சின்னத்திரையில் 8 சீரியல்களில் மெயின் ரோலில் நடித்துள்ளார். அத்தோடு தொகுப்பாளராகவும் பல நிகழ்ச்சிகளை சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ளார்.
இவ்வாறாக திரையுலகில் பிஸியாக வலம் வந்து கொண்டிருந்த கல்யாணி 2013-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரோஹித் என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப பந்தத்தில் இணைந்து கொண்டார். இவருக்கு இப்போது ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் தற்போது கல்யாணியின் அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் அட கல்யாணிக்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா எனக் கேட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.
Listen News!