• Nov 17 2024

டிவி ஷோவில் வில்லங்கமாகப் பேசிய நடிகை கங்கனா ரனாவத்- முகம் சிவந்து நின்ற பிரபல நடிகரின் காதலி

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஹிந்தி மொழித் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருபவர் தான் நடிகர் கரண் குந்த்ரா. இவர் பிரபல பாலிவூட் நடிகையான கங்கனா ரனாவத் தொகுத்து வழங்கும் லாக் அப் என்ற நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாரளாக பங்குபற்றி வந்தார்.

லாக் அப் என்றாலே தங்கள் ரகசியத்தைப் போட்டு உடைப்பது தான் என்பார்கள். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் ஃபினாலேவில் கரண் குந்த்ராவின் காதலியான நடிகை தேஜஸ்வி பிரகாஷ் கலந்து கொண்டார்.

இந்நிலையில் கரண் மற்றும் தேஜஸ்வியிடம் சில வில்லங்கமான கேள்விகளை கேட்டார் கங்கனா ரனாவத். உங்கள் இருவரில் யார் நன்றாக முத்தம் கொடுப்பார் என்று கங்கனா கேட்க, தேஜஸ்வியை கையை காட்டினார் கரண்.

இல்லை, இல்லை, கரண் தான் நன்றாக முத்தம் கொடுப்பார் என்றார் தேஜஸ்வி. அதற்கு கரணோ, முதல் முறை முத்தம் கொடுத்தபோது நீ தான் பெஸ்ட் என்றார். அதை தேஜஸ்வியும் ஒப்புக் கொண்டார்.

பொது இடங்களில் நெருக்கமாக இருப்பதை விரும்புவது யார் என்று கங்கனா கேட்க, கரணை கை காட்டினார் தேஜஸ்வி. டாப்பில் இருக்க யாருக்கு பிடிக்கும், நான் கேமை பற்றி பேசுகிறேன் என்று கேட்டார் கங்கனா.

அதற்கு கரணோ, தேஜஸ்விக்கு டாப்பில் இருக்க பிடிக்கும், நான் கேமை பற்றி சொல்லவில்லை என்றார். அதை கேட்டு தேஜஸ்வி வெட்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement