• Nov 14 2024

ஹாலோவீன் மேக்கப் போட்டு மகனுடன் வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை கனிகா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 5 ஸ்டார்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் கனிகா. இவர் இதனைத் தொடர்ந்து கடந்த 2006ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான வரலாறு படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபல்யமானார்.


தொடர்ந்து ஆட்டோ கிராப், எதிரி போன்ற படங்களில் நடித்ததோடு ஷங்கரின் அந்நியன், சிவாஜி, சச்சின் படங்களின் ஹீரோயின்களுக்கு  டப்பிங் பேசியதும் கனிகா தான். மலையாளத்தில் மோகன்லால், ஜெயராம், சுரேஷ் கோபி, மம்முட்டி என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.


கடைசியாக தமிழில் விஜய் சேதுபதி நடித்துள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நடித்து இருந்தார்.இந்தத் திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது. அத்தோடு கனிகா சன் டிவியின் எதிர் நீச்சல் என்னும் சீரியலில் நடித்து வருகின்றார்.


சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும்  கனிகா அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வதை வாடிக்கையாக கொண்டவர். இந்நிலையில் நடிகை கனிகா, தனது மகனுடன் இணைந்து ஹாலோவீன் நாளை முன்னிட்டு ஹாலோவீன் மேக்கப் போட்டு புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 


தொப்பி அணிந்து Blonde தலைமுடியுடன் கருப்பு நிற டி சர்ட் அணிந்து கனிகா காணப்படுகிறார்.இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருவதையும் காணலாம்.



Advertisement

Advertisement