• Sep 20 2024

நடிகை கரீனா கபூருக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் - அதுவும் இவ்வளவு பெரிய பதவியிலா ?

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

ஹிந்தி சினிமாவில் முக்கிய நட்சத்திர நடிகையாக விளங்குபவர் நடிகை கரீனா கபூர் கான் ஆவர்.


ஹிந்தி சினிமாவில் அனுபவமிக்க நடிகையாகவும், பல வருடங்கள் செயலாற்றிய நடிகையாகவும் விளங்கும் இவர் 100 க்கும் மேற்பட்ட ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அது மட்டுமல்லாது பல விளம்பரப் படங்களிலும் இவர் நடித்துள்ளார். நடிகர் சைப் அலிகானை திருமணம் செய்து திருமண வாழ்க்கையில் இணைந்த கரீனாவுக்கு இரண்டு வாரிசுகள் உள்ளன.

தற்போது கூட சினிமாவில் நடித்து வரும் இவர் பல்வேறு நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாசிடராக செயல்பட்டு வருகின்றார்.

இந்நிலையில் தற்போது கரீனா குளோரியா என்ற இன்டீரியர் டெக்கரேஷன் நிறுவனத்திற்கு பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டிருக்கும் தகவலை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

இதனை பார்த்த அவரது ரசிகர்கள் அனைவரும் அவருக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்





Advertisement

Advertisement