• Sep 20 2024

48 வயதிலும் இளமை மாறாமல் இருக்கும் நடிகை கஸ்தூரி... இவங்க அழகின் ரகசியம் என்னவோ..! கமெண்டுகளைத் தெறிக்கவிடும் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு,கன்னடம் போன்ற பல மொழிகளிலும் கொடி கட்டிப் பறந்திருக்கின்றார். அதுமட்டுமல்லாது 1992 இல் 'மிஸ் மெட்ராஸ்' அழகிப் போட்டியில் பட்டம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


இவர் நடிப்பில் உருவான படங்களில் 'ஆத்தா உன் கோவிலிலே, ராசாத்தி வரும் நாள், சின்னவர், செந்தமிழ்ப் பாட்டு, அமைதிப்படை' போன்ற பல படங்கள் இன்றும் நம்மால் மறக்க முடியாது. தமிழ் சினிமா ரசிகர்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்த கஸ்தூரி 'சக்கரவர்த்தி' என்ற படத்தின் மூலம் மலையாளத்திலும் கால் பதித்திருக்கின்றார்.


இவ்வாறாக பல மொழிப் படங்களிலும் மாஸ் காட்டி வந்த கஸ்தூரி விஜய் டீவியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் சீசன் 3 இலும் போட்டியாளராக களமிறங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக அனைத்துத் துறைகளிலும் சாதனை நிலை நாட்டி வருகின்ற இவர் சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருபவர்.


அதில் எப்போதும் தனது புகைப்படங்கள், மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்போதும் தன்னுடைய க்யூட் ஆன புகைப்படங்களை வெளியிட்டிருக்கின்றார். அதனைப் பார்த்த ரசிகர்கள் "உங்க அழகின் ரகசியம் என்ன" எனக் கேட்டு தமது கமெண்டுகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement