• Sep 20 2024

சரியான புரிதலில்லாமல் அவசரப்பட்டு அறிக்கை விடாதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் செய்த கஸ்தூரி..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த நடிகர் விஜய்க்கு சரியான அரசியல் புரிதல் இல்லாமல் அறிக்கை விட வேண்டாம் என நடிகை கஸ்தூரி அட்வைஸ் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜய் கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது கட்சியில் உறுப்பினராக சேர்வதற்கு செயலி ஒன்றை அறிமுகப்படுத்தினார் என்பதும் அந்த செயலி மூலம் இரண்டே நாட்களில் 50 லட்சம் பேர் உறுப்பினராக சேர்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாசர் மகன் உள்பட பல திரையுலக பிரபலங்களும் ஏராளமான ரசிகர்களும் பொதுமக்களும் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக சேர்ந்ததாக சமூக வலைதளத்தில் பதிவு செய்த புகைப்படங்கள் வைரல் ஆகி வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மத்திய அரசு இந்தியாவில் சிஏஏ சட்டம் அமல்படுத்த போவதாக அறிவித்ததை அடுத்து தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டன. அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது:

சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 போன்ற எந்த சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த அறிக்கைக்கு எதிர்ப்பும் ஆதரவும் குவிந்து வரும் நிலையில் நடிகை கஸ்தூரி சரியான அரசியல் புரிதல் இல்லாமல் அரசியல் அறிக்கை வெளியிட வேண்டாம் என்று அட்வைஸ் செய்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில் இது குறித்து கூறியிருப்பதாவது:

அன்பிற்குரிய தளபதி விஜய் தன் அரசியல் ஆலோசகர்களை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.  CAA என்பது இஸ்லாமிய அண்டை நாட்டு மதவாதத்திலிருந்து தப்பி வந்தவர்களுக்கு புகலிடம் தரும் மனிதநேய சட்டம். சரியான புரிதலில்லாமல்  அவசரப்பட்டு அறிக்கை விடுவது சரியல்ல.

சொல்ல போனால், ஈழத்தமிழருக்கும் இது போன்று ஒரு வழிவகை ஏற்படுத்த முடியுமா  என்ற கோணத்தில் அல்லவா நாம் போராட வேண்டும்.  இங்குள்ள இஸ்லாமியர் வெளியேற்றப்படுவார்கள் என்ற திட்டமிட்ட பொய்யை பரப்பும் விஷமிகளை அல்லவா நாம் கண்டித்திருக்க வேண்டும்

Advertisement

Advertisement