இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் பீஸ்ட். இப்படத்தில் விஜய் ராணுவ வீரராக நடித்திருந்தார்.கதாநாயகியாக தெலுங்கு நாயகி பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.
இப்படம் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக் குவித்தது. அத்தோடு இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அதிலும் சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக் குத்து பாடல் வேற லெவலில் ரீவ் ஆனது.
அனிரூத் இசையில் ஜோனிடா காந்தி- அனிரூத் குரலில் வெளியான இந்த பாடல் அதிக ரீல்ஸ்கள் செய்யப்பட்டன.
அத்தோடு விஜய்யின் ஸ்டேப் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்து இருந்தது. இந்த பாடலுக்கு விளையாட்டு வீரர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் நடன அசைவுகளை இட்டு அசத்தியிருந்தனர்.
தற்போது விஜய் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கும் இந்த படத்தின் முதல் பாடலையும் அரபிக் குத்து பாடல் படமாக்கப்பட்ட அதே செட்டில் படமாக்க விஜய் கூறியதை அடுத்து அங்கேயே முதல் சிங்கிள் படமாக்கப்பட்டுள்ளதாம்.
இந்நிலையில் பிரபல பாலிவூட் நடிகை கத்ரீனா கைஃப் பிரபல பள்ளி ஒன்றில் குழந்தைகளுடன் அரபிக் குத்து பாடலுக்கு ஆடிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
I LOVE HER TO BITS I ALWAYS WILL https://t.co/S180aJENLs
அத்தோடு கத்ரீனா தற்போது மேரி கிருஸ்துமஸ் படத்தில் நடித்து வருகிறார். இதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கிய ரோலில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது..
Listen News!