• Sep 20 2024

மஞ்சள் உடையில் ரசிகர்களை மயக்கும் நடிகை கீர்த்தி ஷெட்டி-வைரலாகும் போட்டோக்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தன்னுடைய 17 வயதிலேயே கதாநாயகியாக அறிமுகமாகி தன்னுடைய அழகிய தோற்றத்தினாலும், நடிப்பினாலும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவரே நடிகை கீர்த்தி ஷெட்டி. இவர் பிரபல தெலுங்கு நடிகரும் மெகா ஸ்டாருமான நடிகர் சிரஞ்சீவியின் மருமகன் ஆன பஞ்ச வைஷ்ணவ் தேஜ்ஜிற்கு ஜோடியாக 'உப்பேனா' என்ற படத்தில் கதாநாயகி பாத்திரத்திரத்தில் அறிமுகமாகி இருந்தார். அதுமட்டுமல்லாது விஜய்சேதுபதிக்கு மகளாகவும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தில் பஞ்ச வைஷ்ணவ் தேஜ்ஜுக்கு ஜோடியாக நடிகை மனிஷா ஏற்கெனவே ஒப்பந்தமாகி இருந்தார். எனினும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் அப்படத்தின் பாதியில் இருந்து வெளியேறி விட்டார். அதனாலேயே இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கீர்த்தி ஷெட்டிக்கு கிடைத்தது. இப்படம் அன்றைய கொரோனா சூழலிலும் யாருமே எதிர் பார்க்காத வண்ணம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் அப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த நடிகை கீர்த்தி ஷெட்டி பலரதும் கவனத்தை ஈர்த்தார்.

குழந்தைப் பருவத்திலிருந்தே திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆர்வமாக இருந்த நடிகை கீர்த்தி ஷெட்டிக்கு அவருடைய அழகிய கவர்ச்சியான உடலமைப்பு அந்த வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது. இவர் தனது இளம் வயதிலேயே மாடலிங் துறையில் கால்பதித்து தொடர்ந்து பல விளம்பரப் படங்களிலும் நடித்து தன்னுடைய புன்னகையினாலும், சிறந்த தோற்றத்தாலும் பல ரசிகர்களின் மனதை வசீகரித்துள்ளார்.

இவர் நடிப்பில் மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருபவர். அவ்வப்போது கலக்கல் போட்டோஷூட் நடாத்தி அதனை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்ப்பவர். இந்நிலையில் இவர் தற்போதும் மஞ்சள் நிற ஆடையில் மஞ்சக்காட்டு மைனா என்று சொல்லுமளவிற்கு உடை அணிந்து ரசிகர்களின் மனங்களை குழம்பச் செய்துள்ளார். இப்போட்டோக்கள் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகின்றன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement