• Nov 17 2024

அசத்தலான முறையில் யோகாசனம் செய்யும் நடிகை கீர்த்தி சுரேஷ்- தீயாய்ப் பரவி வரும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

2002 களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 2013இல் கீதாஞ்சலி என்ற மலையாள திரைப்படத்தில் கதாநாகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்தவர். தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் ரெமோ, ரஜனி முருகன் போன்ற படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தார்.

இதையடுத்து நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை வைத்து உருவான திரைப்படத்தில் சாவித்திரியின் கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்தார்.இதற்காக தேசிய விருதையும் பெற்றார். இதைத்தொடர்ந்து ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட் முன்னணி நடிகையாக வலம்வருகின்றார்.

தனக்கான கதையம்சத்தை தேர்ந்தெடுத்து வரும் கீர்த்தி சமீபத்தில் வெளியான சர்காரு வாரி பாட்டா படத்தில் மகேஷ் பாபாவுக்கு ஜோடியாகவும், சாணிக்காகிதம் படத்தில் மிகவும் வித்தியாசமான ரோலிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றார்.

அவ்வாறு சமூகவலைத்தளத்தில் மிக சுறுசுறுப்பாக உள்ள நடிகை கீர்த்தி அடிக்கடி நல்ல விஷயங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு வருவார்.அந்தவகையில் நேற்று சர்வதேச யோகா தினம். இதற்காக நடிகை கீர்த்தியே யோகா செய்து தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த நடிகைள் மற்றும் ரசிகர்கள் Happy Yoka Day என்று கம்மெண்ட்ஸ்களை பதிவிட்டுள்ளார்.இந்நிலையில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement